துறைமுக ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுக்கத் தீர்மானம்!

துறைமுக ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுக்கத் தீர்மானம்!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பான  பிரச்சினைகளை முன்வைத்து  துறைமுக ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

இந்த  விடயம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் தௌவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் பாதுகாப்பு தொழிற்சங்கம்  தெரிவித்துள்ளது.

குறித்த பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கையினை கைவிட போவதில்லை என  இலங்கை சுதந்திர சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  துறைமுக அதிகார சபையின், ஶ்ரீலங்கா சுதந்திர ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுத்தரகே தெரிவித்துள்ளார்.

இன்று நண்பகல் 12 மணியளவில் துறைமுகத்தின் பெருமளவான ஊழியர்களின் பங்கேற்புடன் பேரணி முன்னெக்கப்பட்டு தமகு கோரிக்கைகள் அடங்கிய ஆவணமொன்றினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் கையளிப்பதறகு எதிர்ப்பார்த்துள்ளதாகவும்  ஶ்ரீலங்கா சுதந்திர ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்