
அழகாக மாறப்போகும் கொழும்பு
கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை நகரங்களை அழகுபடுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அத்துடன் இயற்கைக்காட்சி வனப்புடைய சூழ்நிலை மேம்பாட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிப்பட்டுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இந்த கவலை அமைச்சர் பந்துல தெரிவித்துள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகார சபை இதனை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.
மேலும் சில அமைச்சரவை முடிவுகள்,
1952 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட லும்பினி மண்டபத்தில் (கலையரங்கில்) தற்பொழுது உள்ள வசதி போதுமானது அல்ல காலத்திற்கு பொருத்தமான வகையில் அதனை நவீனமயப்படுத்தல் மற்றும் புனரமைப் பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
தேசிய அடிப்படை ஆய்வுகள் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் கீழ் Biofilm bio-fertilizer உயிருள்ள நுண்ணுயிரிகளைக் கொண்ட மண் ஊட்ட உர பாவனை அடுத்த வருடத்தில் இந்த உரத்தை பயன்படுத்தி நெல் உற்பத்தி செய்யப்படும் நிலப்பரப்பை 120,000 ஏக்கர் வரையில் அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
1952 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட லும்பினி மண்டபத்தில் (கலையரங்கில்) தற்பொழுது உள்ள வசதி போதுமானது அல்ல காலத்திற்கு பொருத்தமான வகையில் அதனை நவீனமயப்படுத்தல் மற்றும் புனரமைப் பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தில் பிரதான சுரங்கத்தில் ஏற்பட்ட நீர் ஒழுக்கு காரணமாக பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மொரகொல்ல நீர் மின் உற்பத்தி திட்டத்தின் பணிகளை பூர்த்தி செய்யும் கால எல்லையை நீடித்தல் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் சம்பந்தப்பட்ட கால எல்லை நிறைவடையும் தினத்தை நீடிக்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.