இஸ்ரேல் யுத்தம்.. அன்றே கணித்த பாபா வாங்கா! அடுத்தது என்ன...

இஸ்ரேல் யுத்தம்.. அன்றே கணித்த பாபா வாங்கா! அடுத்தது என்ன...

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே பெரும் போர் ஆரம்பித்துள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டு தொடர்பில் பலிகேரியாவை சேர்ந்த பாபா வாங்காவின் கணிப்பு ஒன்று இப்போது , முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

எதிர்காலம் குறித்து அறிந்து கொள்ள இங்கே அனைவருக்குமே ஆர்வம் இருக்கவே செய்யும். அப்படி எதிர்காலம் குறித்து துல்லியமாகக் கணித்துச் சொன்னவர் பல்கேரியாவை சேர்ந்த பாபா வாங்கா.

இஸ்ரேல் யுத்தம்.. அன்றே கணித்த பாபா வாங்கா! அடுத்தது என்ன? | Israel War Baba Wanga Predicted That Day

இவர் தற்போது உயிருடன் இல்லை என்றாலும் பாபா வங்காவில் கணிப்புக்கள் அவ்வப்போது அரங்கேறிவருகின்றமை உலக மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த பாபா வாங்காவின் இயற்பெயர் வாங்கெலியா பாண்டேவா குஷ்டெரோவா. ஒட்டமான் பேரரசில் 1911ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1996 வரை வாழ்ந்துள்ளார். இவருக்கு 12 வயதாக இருந்த போதே மின்னல் தாக்கியதில் இவர் தனது கண் பார்வையை இழந்தார்.

அவரது கண் பார்வை போனாலும், அதன் பின்னரே அவரால் எதிர்காலத்தைப் பார்க்க முடிந்ததாக கூறுகின்றனர். பாபா வங்கா 1996இல் மறைந்தார்.

இரட்டை கோபுர தாக்குதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது, செர்னோபில் பேரழிவு என இவர் கணித்த மிகப் பெரிய சர்வதேச நிகழ்வுகள். அதுமட்டுமல்லாது இளவரசி டயானா மரணம், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி உள்ளிட்ட விஷயங்களைக் கூட அவர் துல்லியமாகக் கணித்துள்ளார்.

இஸ்ரேல் யுத்தம்.. அன்றே கணித்த பாபா வாங்கா! அடுத்தது என்ன? | Israel War Baba Wanga Predicted That Dayஇவரது கணிப்புகள் 80-85% வரை துல்லியமாக நடந்துள்ளதனால் இஅவரது கணிப்புக்களை மக்கள் நம்புகின்றார்கள். அதன்படி இந்த 2023 ஆண்டிற்கான இவரது கணிப்புகளில் இரண்டு இப்போது முக்கியமானதாக இருக்கிறது. 

2023  மூன்றாம் உலகப் போர் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளார். அடுத்து அணு ஆயுதங்களும் கூட பயன்படுத்தப்படும் எனக் கணித்துள்ளார்.

இஸ்ரேல் யுத்தம்.. அன்றே கணித்த பாபா வாங்கா! அடுத்தது என்ன? | Israel War Baba Wanga Predicted That Day

இதில் முதலாம் கணிப்பு முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால் இப்போது இஸ்ரேல்- ஹமாஸ் படைக்கு இடையே போர் ஆரம்பித்துள்ளது. இதில் உலக நாடுகள் இரு பிரிவுகளாகப் பிரிந்து போக வாய்ப்புகள் அதிகம்.

இது அடுத்த மூன்றாம் உலகப் போருக்கும் கூட வழிவகுக்க வாய்ப்பு இருக்கிறது. உக்ரைன் விவகாரத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தன.

இஸ்ரேல் யுத்தம்.. அன்றே கணித்த பாபா வாங்கா! அடுத்தது என்ன? | Israel War Baba Wanga Predicted That Day

அமெரிக்கா  உள்ளே  நுழைந்தால்   3 ஆம் உலகப்போர் மூழும்

ஓரிரு நாடுகள் மட்டுமே ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்தது. மற்ற நாடுகள் நடுநிலை நிலைப்பாட்டை எடுத்தது. ஆனால் இஸ்ரேல் போரில் அப்படி இல்லை. மேற்குலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கிறது.

அதேநேரம் அரபு நாடுகள், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. போர் தொடரும்பட்சத்தில் அதில் மற்ற நாடுகள் உள்ளே வரலாம்.

குறிப்பாக இஸ்ரேல் நாட்டில் அமெரிக்கர்கள் பல ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் நிச்சயம் அமெரிக்கா உள்ளே வரும். ஒரு வல்லரசு நாடு உள்ளே வந்தால் இது அடுத்த உலகப் போர் மூழுவதை யாராலும் தடுக்க முடியாது.

அதேபோல போர் என்று வந்துவிட்டால் அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தவும் வாய்ப்புகள் மிக அதிகம். இதன் காரணமாகவே எங்குப் பாபா வாங்காவின் கணிப்புகள் உண்மையாகிவிடுமோ என்ற அச்சம் தோன்றியுள்ளது.