ETI பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி வைப்பாளர்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவு Featured
இலங்கை மத்திய வங்கியானது ETI பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி என்பனவற்றின் நிதி வியாபாரங்கள் 2020.07.13ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் இடைநிறுத்தப்பட்டதனைத் தொடர்ந்து இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்திலிருந்து ETI பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி வைப்பாளர்களுக்கு நட்டஈட்டுக் கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான வழிமுறைகளை எடுத்துள்ளது.
அதற்கமைய தீவு முழுவதிலுமுள்ள தெரிவுசெய்யப்பட்ட மக்கள் வங்கிக் கிளைகளினூடாக 2020.07.25ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் நட்டஈட்டுக் கொடுப்பனவு ஆரம்பிக்கப்படும். இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்தின் ஒழுங்குவிதிகளின் நியதிகளுக்கமைவாக, வைப்பாளர் ஒருவருக்கு ரூ.600,000 கொண்ட உயர்ந்தபட்ச நட்டஈடு தீவுமுழுவதிலுமுள்ள 45 மக்கள் வங்கிக் கிளைகளினூடாக கொடுப்பனவு செய்யப்படும்.
அதற்கமைய, ETI பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி மூலம் உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து வைப்பாளர்களுக்கும்ஃ சட்டமுறையான பயன்பெறுநர்களுக்கும் நட்டஈடுகளைக் கொடுப்பனவு செய்வதற்குத் தேவையான நிதியங்கள் இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்தின் மூலம் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் நட்டஈட்டு நடைமுறை வினைத்திறன் மிக்க மற்றும் செயல்திறன் வாய்ந்த விதத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதனை உறுதிசெய்வதற்கு இலங்கை மத்திய வங்கி அனைத்து தேவையான வழிமுறைகளையும் எடுத்துள்ளது.
வைப்புச் சான்றிதழ்கள், அடையாளப்படுத்தும் விபரங்கள் மற்றும் ஏனைய தேவையான மூல ஆவணங்களினை மக்கள் வங்கியின் தொடர்புடைய கிளைக்குச் சமர்ப்பிப்பதன் மூலம் இந்நட்டஈட்டுக் கொடுப்பனவுத் திட்டத்திற்கு தமது உயர்ந்தபட்ச ஒத்துழைப்பினை வழங்குமாறு ETI பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் வைப்பாளர்கள் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
ETI பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி வைப்பாளர்களுக்கான நட்டஈடு தொடர்பான மேலதிக விபரங்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்களிலிருந்து பெற்றுக்கொள்ளமுடியும்.
மக்கள் வங்கி: 0112 481 594, 0112 481 320, 0112 481 617, 0112 481 703
இலங்கை மத்திய வங்கி: 0112 398 788, 0112 477 261