வெளிநாடொன்றில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு.

வெளிநாடொன்றில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு.

துருக்கியின் இஸ்தான்புல்லில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிற்சை பெற்றுவந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கபப்டுகின்றது.

கடந்த ஒகஸ்ட் மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வெளிநாடொன்றில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு | A Sri Lankan Died In An Accident In Turkeyஇஸ்தான்புல்லில் விமான நிலையத்தை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்று 50 அடி குன்றின் கீழே விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த பேருந்தில் சுமார் 35 இலங்கையர்கள் பயணித்திருந்த நிலையில் 08 பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.