பால் ஏற்றிச்செல்லும் வாகனம் தடம்புரண்டு விபத்து

பால் ஏற்றிச்செல்லும் வாகனம் தடம்புரண்டு விபத்து

வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் பால் ஏற்றிச்செல்லும் கொள்கலன் வாகனமொன்று இன்று காலை விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

மாங்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி சென்ற குறித்த கொள்கலன் வாகனமானது கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இந்த அனர்த்தத்திற்கு இலக்காகியுள்ளது.

வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே கொள்கலனானது கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்தில் கொள்கலனின் சாரதியான கேகாலை பகுதியை சேர்ந்த நபரே காயமடைந்துள்ளார்.

விபத்து தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.