இலங்கையில் தற்கொலை செய்துகொண்ட 18 வயது இளைஞன்! அதிர்ச்சியை ஏற்படுத்திய பின்னணி.

இலங்கையில் தற்கொலை செய்துகொண்ட 18 வயது இளைஞன்! அதிர்ச்சியை ஏற்படுத்திய பின்னணி.

தெல்தெனிய வைத்தியசாலையின் 5 அவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட 18 வயதுடைய இளைஞன் அலைபேசிக்கு அடிமையாகி மன உளைச்சலுக்கு ஆளானதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் தற்கொலை செய்துகொண்ட 18 வயது இளைஞன்! அதிர்ச்சியை ஏற்படுத்திய பின்னணி | Young Man Suicide By Jumping From Hospital Floor

பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து அலைபேசியை கைப்பற்றியதையடுத்து கத்தியை எடுத்து தனது உடலின் பல பாகங்களை வெட்டியதால் படுகாயமடைந்து இளைஞன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பன்வில கந்தேகும்புர பிரதேசத்தை சேர்ந்த 18 வயதான ஹர்ஷன லக்ஷான் தில்ருக்ஷ என்ற இளைஞனே ஒரு நாளைக்கு 18 மணித்தியாலங்களை அலைபேசியுடன் தனியாக செலவிடுவதுடன்,தொடர்பு இல்லாமல் நேரத்தை கடத்துவதற்காக பல்வேறு காணொளி கேம்களுக்கு அடிமையாகியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இலங்கையில் தற்கொலை செய்துகொண்ட 18 வயது இளைஞன்! அதிர்ச்சியை ஏற்படுத்திய பின்னணி | Young Man Suicide By Jumping From Hospital Floorதற்கொலை செய்துகொள்ளவதற்கு முன்னர் குறித்த இளைஞன் தனது பெற்றோருக்கு, கடிதம் ஒன்றையும் எழுதியிருந்ததாகவும் அக்கடிதத்தில் தனது பெற்றோரை கடுமையாக குற்றம் சுமத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, தெல்தெனிய வைத்தியசாலை நிர்வாகத்திற்கு கண்டி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சேனகக்க தலகல பணித்திருந்தார்.