காவல் அரணில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு.
வெலிகந்தவில், மொரகஹாகந்த பகுதியில் உள்ள பொலிஸ் அரணில் கடமையாற்றிய காவல்நிலைய உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெலிகந்த காவல்துறையில் பணிப்புரியும் ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

காவல் அரணில் நேற்றிரவு இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தவிடயம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.