புதிய பிறப்புச் சான்றிதழில் வரவிருக்கும் மாற்றங்கள் எவை? முழுமையான தகவல் வெளியானது

புதிய பிறப்புச் சான்றிதழில் வரவிருக்கும் மாற்றங்கள் எவை? முழுமையான தகவல் வெளியானது

புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள பிறப்புச் சான்றிதழில் பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளதாக பதிவாளர் நாயகம் என்.சீ.வித்தானகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அறிமுகப்படுத்தும் புதிய தேசிய பிறப்பு சான்றிதழில் பழைய சான்றிதழில் காணப்பட்ட குறைப்பாடுகளை நீக்கப்படவுள்ளன. தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திற்கு பொருத்தமன மிகவும் பாதுகாப்பு முறையிலும், சர்வதேச தரத்திற்கமையவும் தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த சான்றிதழில் சில பிள்ளைகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும் பெற்றோரின் திருமணம் தொடர்பான பகுதி நீக்கப்பட்டுள்ளது.

மதம் தொடர்பான தகவல் தேசிய பிறப்பு சான்றிதழில் உள்ளடக்கப்படவில்லை எனவும் இனம் என்ற பகுதியும் நீக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் உள்ளடக்கப்படாத விடயங்களை முழுமைப்படுத்திய பின்னர் மக்களிடம் கையளிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திட்டமிடப்பட்டுள்ள பிறப்பு சான்றிதழிலில் ஏற்படவுள்ள மாற்றம் பின்வருமாறு,

 

  • பிறப்பு சான்றிதழ் என்பதற்கு பதிலாக தேசிய பிறப்பு சான்றிதழ் என அறிமுகப்படுத்தல்

 

  • மொழியியல் ரீதியாக செயலாக்கப்படல்

 

  • பிறக்கும்போது கொடுக்கப்பட்ட அடையாள எண் உள்ளிடப்பட்டுள்ளது

 

  • மிகவும் பாதுகாப்பான காகிதத்தில் டிஜிட்டல் முறையில் செயலாக்கப்படல்

 

  • உடனடி மறுமொழி குறியீடு, குறியீடு எண், Water mark மற்றும் ஒரு ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டப்படல்

 

  • பதிவாளர் நாயகத்தில் கையொப்பத்துடன் வழங்குதல் ஆகிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.