சிங்கப்பூரில் கொரோனாவுடன் போராடிய தமிழ் பெண்மணிக்கு கிடைத்த உயரிய விருது

சிங்கப்பூரில் கொரோனாவுடன் போராடிய தமிழ் பெண்மணிக்கு கிடைத்த உயரிய விருது

கொரோனா நோய்த் தொற்று சூழலில் சிங்கப்பூரில் சிறந்து பணியாற்றி வருவதற்காக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 59 வயதுடைய தமிழ் பெண்மணியான செவிலியா் கலா நாராயணசுவாமிக்கு அந்நாட்டு அதிபா் விருது வழங்கப்படுகிறது.

இந்த விருது பெறுவோருக்கு கோப்பை, அதிபா் ஹலிமா யாகோப் கையெழுத்திட்ட சான்றிதழ், சுமார் 5.40 ரூபாய் லட்சம் வழங்கப்படுகிறது.

கலாவுடன் சோ்த்து மொத்தம் 5 செவிலியா்களுக்கு இந்த விருது வழங்கப்படுவதாக சிங்கப்பூா் சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள உட்லாண்ட்ஸ் சுகாதார மையத்தில் துணை இயக்குநராக இருக்கும் கலா நாராயணசுவாமி, நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

செவிலியராக 40 ஆண்டுகால அனுபவம் கொண்டுள்ள கலா நாராயணசுவாமி, செவிலியா் பணியில் பல்வேறு நவீன முயற்சிகளை புகுத்துவதிலும் ஈடுபட்டு வருகிறார்.

சிங்கப்பூரில் செவிலியருக்கான இந்த அதிபா் விருது கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 77 செவிலியா்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.