தமிழ் நடிகர் என்னை துன்புறுத்தினார், ஆனால்?- ஷாக்கிங் தகவல் கூறிய நித்யா மேனன்.
ஒரு நடிகை என்றால் உயரமாக, ஒல்லியாக இருக்க வேண்டும் என சில கட்டுப்பாடுகள் பல வருடங்களுக்கு முன் இருந்தது.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் திறமையான நடிப்பை வெளிக்காட்டினால் எப்படி இருந்தாலும் சினிமாவில் ஜெயிக்கலாம் என காட்டி வருபவர் தான் நித்யா மேனன்.
கொஞ்சம் உடல் பருமனாக, உயரம் குறைவாக இருந்தும் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தனக்கு மொழி பிரச்சனையே இல்லை என்று அனைத்து மொழிகளிலும் நடித்து அசத்தி வருகிறார்.
இந்த நிலையில் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் நடிகை நித்யா மேனன் பேசும்போது, தெலுங்கு சினிமாவில் இதுவரை நான் எந்த ஒரு பிரச்சனையையும் சந்தித்தது இல்லை.
ஆனால் தமிழ் சினிமாவில் நிறைய பிரச்சனை சந்தித்தேன். ஒரு படத்தின் படப்பிடிப்பு போது தமிழ் சினிமா நடிகர் என்னை துன்புறுத்தினார் என கூறியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் யார் அந்த ஹீரோ என கேள்லி எழுப்பி வருகின்றனர்.