நாட்டின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.