காருக்குள் வைத்து வர்த்தகர் ஒருவர் சுட்டுப் படுகொலை..!

காருக்குள் வைத்து வர்த்தகர் ஒருவர் சுட்டுப் படுகொலை..!

காருக்குள் வைத்து வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் காலியில் நேற்று (23.09.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த வர்த்தகர் காலி – டிக்சன் வீதியில் காரில் பயணித்த வேளை அவரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய இந்தத் துப்பாக்கி சூட்டில் அந்த வர்த்தகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காருக்குள் வைத்து வர்த்தகர் ஒருவர் சுட்டுப் படுகொலை | A Businessman Was Shot Dead Inside His Car

மேலும் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.