பேராதனை பல்கலைக்கழக மாணவன் திடீரென உயிரிழப்பு..!

பேராதனை பல்கலைக்கழக மாணவன் திடீரென உயிரிழப்பு..!

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவ பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார்.

பேராதனை பல்கலைக்கழக மாணவன் திடீரென உயிரிழப்பு | Peradanai University Student Dies Suddenly

பேராதனை பல்கலைக்கழக மாணவன் திடீரென உயிரிழப்பு | Peradanai University Student Dies Suddenly

பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் மாணவர்களுடன் தங்கியிருந்த மாணவன் மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மணித்தியாலத்தில் உயிரிழந்துள்ளார். 

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.