கொழும்பின் பல பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு..!

கொழும்பின் பல பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு..!

கொழும்பின் பல பகுதிகளில் இந்த வாரம் 12 மணித்தியால நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இந்த நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, நாளைமறுதினம் (23.09.2023) மாலை 06.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (24.09.2023) காலை 06.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.