
புவனேகபாகு மன்னன் கால கட்டட விவகாரம் : பிரதேசத்திற்குள் நுழைவதற்குத் தடை!
புவனேகபாகு மன்னன் காலப் பகுதிக்குரிய கட்டடம் அமைந்திருக்கும் பிரதேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டடம் தொடர்பான விசாரணைகள் முடியும்வரை அப்பிரதேசத்திற்குள் உட்பிரவேசிப்பதற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தடை உத்தரவு சட்ட மா அதிபர் திணைக்களத்தால் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெறும் வரையில், குறித்த கட்டடம் அமைந்துள்ள பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்படி தடை உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.