சிறுமிகளின் நிர்வாணப் படங்களை விற்பனை செய்த இளம் பிக்கு.

சிறுமிகளின் நிர்வாணப் படங்களை விற்பனை செய்த இளம் பிக்கு.

ராகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்து 19 வயதுடைய பிக்கு ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமிகளின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்கள் ஊடாக விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமிகளின் நிர்வாணப் படங்களை விற்பனை செய்த இளம் பிக்கு | Young Pikku Sold Nude Pictures Of Girlsபொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்ற புலனாய்வு அதிகாரிகள் அந்தக் விகாரையில் இருந்தே புகைப்படங்கள் விற்பனை செய்யும் நடவடிக்கை ஒன்று இடம்பெற்றுள்ளதாக கண்டுபிடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

விகாரையின் கணினியில் சுமார் 1,500 சிறுமிகளின் நிர்வாணக் காட்சிகள் இருந்ததோடு அதில் 80 சதவிகிதம் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளுடையதென தெரியவந்துள்ளது.

இந்த நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் விற்றதாக பிக்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அதிகாரி நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.