பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி வீட்டில் நேர்ந்த துயர சம்பவம்.

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி வீட்டில் நேர்ந்த துயர சம்பவம்.

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகளான மீரா தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் இன்று அதிகாலை 03 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது வழியிலேயே அவரது உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி வீட்டில் நேர்ந்த துயர சம்பவம் | Vijay Antony S Daughter Commited Suicide

இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சர்ச் பார்க் பாடசாலையில் 12ஆம் வகுப்பில் கல்வி பயின்று வந்த மீரா கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.