மாளிகாவத்தை துப்பாக்கி பிரயோகத்தில் 12 வயது சிறுமி உயிரிழப்பு.

மாளிகாவத்தை துப்பாக்கி பிரயோகத்தில் 12 வயது சிறுமி உயிரிழப்பு.

 மாளிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 12 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நேற்றையதினம்(17) (ஞாயிற்றுக்கிழமை) இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

மாளிகாவத்தை துப்பாக்கி பிரயோகத்தில் 12 வயது சிறுமி உயிரிழப்பு | A 12 Year Old Girl Killed In Maligawat Shootingமோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்த சிறுமி மற்றும் அவரது தந்தை மீது துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்டதாக மருதானை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பு மருதானை, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் நேற்று துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்த 6 வயது சிறுமி மற்றும் அவரது தந்தை மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக மருதானை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தந்தையும் மகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 வயது மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.