
விசேட செயற்திட்டம்- தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு
பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவுபெற்று வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் வரை வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பதற்கான விசேட செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் ஒவ்வொரு அரசியில் கட்சிகளினதும் இரண்டு பிரதிநிதிகள் மற்றும் சுயாதீன குழுக்களின் உறுப்பினர்கள் இருவரை வாக்களிப்பு நிலையங்களில் அமர்த்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் அதன் வெளிப்புறத்தில் பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸார் மற்றும் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார்