கிளிநொச்சி ஏ-9 வீதியில் விபத்து: ஒருவர் படுகாயம்!
கிளிநொச்சி, ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயமடைந்துள்ள நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து இன்று (வியாழக்கிழமை) காலை ஏ-9 வீதியில் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் வீதியை கடக்க முற்றப்பட்போது வவுனியாவிலிருந்து யாழ். நோக்கிப் பயணித்த அரச பேருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து தொடர்பான விசாரணையை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.