யாழ். ஆயர் மற்றும் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு இடையில் சந்திப்பு

யாழ். ஆயர் மற்றும் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு இடையில் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள், யாழ். ஆயரை இன்று (வியாழக்கிழமை) காலை சந்தித்து கலந்துரையாடினர்.

கூட்டமைப்பின் வேட்பாளரான தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையிலான வேட்பாளர்களே யாழ். ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை ஆயர் இல்லத்தில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் வேட்பாளர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், திருமதி சசிகலா ரவிராஜ், இமானுவேல் ஆர்னோல்ட், தபேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் தேர்கள் கள நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகக் கூறப்படுகிறது.