திருகோணமலையில் அதிகாலை வேளை இடம்பெற்ற அசம்பாவிதம்!

திருகோணமலையில் அதிகாலை வேளை இடம்பெற்ற அசம்பாவிதம்!

ருகோணமலை அல்லை கந்தளாய் பிரதான வீதியை அண்டிய பகுதியில் யானை தாக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தில் கந்தககனாவ, அசலகல, மகியங்கனை பகுதியைச் சேர்ந்த கத்தரசிங்க ஆராச்சிலாகே அந்துன் டத்துர கத்தப்பான்கொட என்ற 52 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யானை தாக்குதலுக்குள்ளான நபர் தொழில் ரீதியாக சேருவில பகுதியில் தங்கி நின்று மணல் அகழ்வு வேலைகளை மேற்கொண்டு வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக சேருவில பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் தற்போது கந்தளாய் தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.