கிளிநொச்சியில் வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியம்பொக்கனை பகுதியல் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருள் காணப்படுவது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைவாக நேற்று குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், அங்குள்ள பற்றையில் காணப்பட்ட பொதியை சோதனையிடுவதற்காக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டதை அடுத்து இன்று (வியாழக்கிழமை) காலை விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, பை ஒன்றிலிருந்து 11 வெடி பொருட்கள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் இதுதொடர்பான விசாரணையை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.