முடிவுக்கு வரும் விஜய் டிவியின் முக்கிய சீரியல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்.
அனைத்து சேனல்களும் தற்போது புதுப்புது சீரியல்களை போட்டி போட்டுக்கொண்டு ஓளிபரப்பி வருகின்றனர். டிஆர்பி ரேட்டிங்டில் சன் டிவி தான் டாப் 5 இடங்களை பெரும்பாலும் பிடித்து வருகிறது. அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் விஜய் டிவி திணறி வருவது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
அதனால் சில சீரியல்களை முடித்துவிட்டு புதிதாக சீரியல்கள் கொண்டு வர விஜய் டிவி முயற்சியில் இருக்கிறது.
தற்போது காற்றுக்கென்ன வேலி சீரியலை விஜய் டிவி முடிக்க இருக்கிறது. சமீபத்தில் தான் சூர்யா மற்றும் வெண்ணிலா திருமணம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.
கிளைமாக்ஸ் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் அந்த சீரியல் ரசிகர்கள் தற்போது அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.