நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் நேற்றைய தினம் 22 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்த நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 7 பேருக்கு இறுதியாக கொவிட்-19 தொற்றுறுதியானது.
அதேநேரம், சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 பேருக்கும், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தொற்றுறுதியான ஒருவருடன் தொடர்பை பேணியிருந்த நுரைச்சோலை தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த ஒருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 752 ஆக உயர்வடைந்துள்ளது. 2 ஆயிரத்து 64 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர் .சிகிச்சை பெறுகின்ற நோயாளிகளின் எண்ணிக்கை 677 ஆக உயர்வடைந்துள்ளது