அமெரிக்காவில் 41 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொவிட்-19 தொற்றினால் பாதிப்பு!

அமெரிக்காவில் 41 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொவிட்-19 தொற்றினால் பாதிப்பு!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 41 இலட்சத்தை கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இதுவரை 41 இலட்சத்து 875பேர் இதுவரை வைரஸ் பெருந் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர்.

உலகளவில் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல்நாடாக விளங்கும் அமெரிக்காவில், இதுவரை மொத்தமாக, ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 183பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 71ஆயிரத்து 967பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்ததோடு, ஆயிரத்து 205பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்த 20இலட்சத்து 12ஆயிரத்து 55பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 19ஆயிரத்து 179பேர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இதுவரை 19 இலட்சத்து 42 ஆயிரத்து 637பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்