தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்று

தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்று

தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை  தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எட்டப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன்  தாங்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு இதுவரை எந்தவொரு தரப்பினரும்  உரிய தீர்வினை முன்வைக்கவில்லை என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய  தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தொழிற்சங்க போராட்டத்தின்  எதிர்கால  நடவடிக்கை குறித்து  தீர்மானிப்பதற்காக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயற்குழு இன்று கூடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினருக்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர்  நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவுக்கும் இடையில் கலந்துரையாடல்  ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது