கப்பல் மாலுமிகள் உள்ளிட்ட 29 பயணிகள் நாட்டிற்கு வருகை

கப்பல் மாலுமிகள் உள்ளிட்ட 29 பயணிகள் நாட்டிற்கு வருகை

கப்பல் மாலுமிகள் உள்ளிட்ட 29 பயணிகள் இன்று விசேட விமானம் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 668 எனும் இலக்க விசேட விமானத்தின் மூலம், கட்டாரின் தோஹா நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை 1.33 க்கு இவர்கள் வருகை தந்தனர்.

விமான நிலையத்துக்கு வருகை தந்த, கப்பல் மாலுமிகள் உள்ளிட்ட 29 பயணிகளும், கொரோனா தொற்றுக்கான PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது