இந்திய நாட்டவருக்கு திருகோணமலையில் ஏற்பட்ட நிலை

இந்திய நாட்டவருக்கு திருகோணமலையில் ஏற்பட்ட நிலை

திருகோணமலை - சேருநுவர பகுதியில் விசா இன்றி வியாபாரம் மேற்கொண்ட இந்திய நாட்டவர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இவரை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் உத்தரவிட்டுள்ளார்.

மருதபட்டித்தெரு,ராஜபாளையம்,விருதுநகரைச் சேர்ந்த 36 வயதுடைய மரியப்பிள்ளை வைரவன் என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான இந்திய நாட்டவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே வீசா காலம் முடிவுற்றுள்ளதாகவும், திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்று ஆடை வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், சந்தேக நபர் சேருநுவர பகுதியில் ஆடை வியாபாரத்தின் போது கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.