கொழும்பில் ரயில் விபத்தில் நபர் பலி - அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை...
கொழும்பின் புறநகர் பகுதியான ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராகம ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த விரைவு ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரயில் பாதுகாப்பு கடவை மூடப்பட்டிருந்த நிலையில், ரயில் கடவையை கடக்க சைக்கிளை தள்ளியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதனால் அடையாளம் காண உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர் மற்றும் வெளிர் மஞ்சள் நிற சட்டை மற்றும் கால்சட்டை அணிந்திருந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.