இறுதிச் சடங்கிற்கு வருமாறு காதலிக்கு அழைப்பு விடுத்த காதலன்.

இறுதிச் சடங்கிற்கு வருமாறு காதலிக்கு அழைப்பு விடுத்த காதலன்.

கர்நாடகாவில் தனது இறுதிச் சடங்கிற்கு வந்து விடுமாறு காதலன் காதலிக்கு அழைப்பு விடுத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பில் காதலன் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே உள்ள தபஸ்பேட் பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற நபரே இவ்வாறு வீடியோ வெளியிட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்கிற்கு வருமாறு காதலிக்கு அழைப்பு விடுத்த காதலன் | Boyfriend Invites His Girlfriend To A Funeral

கடந்த சில நாட்களுக்கு முன் கிரணை வெறிநாய் ஒன்று கடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக காதலன் கிரண் வீடியோ ஒன்றை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது வெளியிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் பேசிய கிரண் தனது இறுதிச்சடங்குக்கு வரும் காதலிக்கு உருக்கமாக வேண்டுகோளை விடுத்து உள்ளது தெரிய வந்துள்ளது.