மன்னாரில் கரையொதுங்கிய சடலம் - பொது மக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறையினர்!!

மன்னாரில் கரையொதுங்கிய சடலம் - பொது மக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறையினர்!!

மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச்சாவடிக்கு சற்று தொலைவில் உள்ள கடற்கரைப் பகுதியில் நேற்றுமுன்தினம் (02-08-2023) மாலை கரையொதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் சுமார் 30 தொடக்கம் 50 வயது மதிக்கத்தக்கதாகவும் 4.8 அடி உயரம் கொண்டது எனவும், சடலத்தில் கறுப்பு நிற நீளக்கை சேட், கறுப்பு நிற அரைக்காற்சட்டை மற்றும் நீல நிற பெட்டி சாரம் அணிந்துள்ளதாகவும் மன்னார் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர் அணிந்துள்ள கறுப்பு நிற அரைக்காற்சட்டையில் (SRI LANKA CRICKET ) என எழுதப்பட்டுள்ளது.

எனவே குறித்த சடலம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் அல்லது அடையாளம் காண விரும்புபவர்கள், மன்னார் காவல் நிலையம் அல்லது மன்னார் மாவட்ட பொது  வைத்தியசாலையுடன் தொடர்பை ஏற்படுத்துமாறு மன்னார் காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.