திருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற எமி ஜாக்சன்.. விரைவில் காதலருடன் திருமணம்.
விஜய் இயக்கத்தில் வெளிவந்த மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன்.
இதன்பின் விஜய்யுடன் தெறி, ரஜினியுடன் 2.0, விக்ரமுடன் ஐ என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் தற்போது விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் மிஷன் பார்ட் 1 படத்தில் நடித்து வருகிறார். நடிகை எமி ஜாக்சன், இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை காதலித்து வந்தார்.
இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. 2019ல் எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தைப் பிறந்தது. குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் என்று பெயர் வைத்துள்ளார். ஜார்ஜை திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் பிரிந்தனர்.
இப்போது பிரபல ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்கை, எமி ஜாக்சன் காதலித்து வருகிறார்.
இந்நிலையில், எமி ஜாக்சன் தனது காதலரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அவரே தெரிவித்துள்ளாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.