ஜீ தமிழின் சரிகமப 3 சிறுவர்களுக்கான நிகழ்ச்சியில் இலங்கை யாழ்ப்பாண சிறுமி...
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் பாடல் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது.
அந்நிகழ்ச்சியை தொடர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன் ஜீ தமிழில் சரிகமப என்ற பாடல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
அண்மையில் பெரியவர்களுக்கான சீசன் முடிந்துள்ள நிலையில் இப்போது சரிகமப 3 Lil Champs சீசன் தொடங்கியுள்ளது. இதில் போட்டியாளர்களின் விவரங்கள் குறித்து வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் சிறுவர்களுக்கான சரிகமப 3 நிகழ்ச்சியில் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து கில்மிஸ்ஷா என்ற சிறுமி கலந்துகொண்டிருக்கிறார்.
அவருக்கு மக்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.