மடு திருவிழாவுக்கு சென்று திரும்பிவேளை விபத்து -அருட்தந்தை உள்ளடங்களாக மூவர் காயம்...

மடு திருவிழாவுக்கு சென்று திரும்பிவேளை விபத்து -அருட்தந்தை உள்ளடங்களாக மூவர் காயம்...

மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, இசைமாளத்தாழ்வு பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(2) மாலை இடம்பெற்ற விபத்தில் மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் குரு முதல்வரும், மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஆணைக்குழுவின் இயக்குனருமான அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உள்ளடங்களாக மூவர் காயமடைந்துள்ளனர்.

மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி நிறைவடைந்த நிலையில், நேற்று மாலை அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய மூவரும் மடு திருத்தலத்தில் இருந்து மன்னார் நோக்கி ஹயஸ் ரக வாகனத்தில் பயணித்துள்ளனர். 

இதன் போது அவர் பயணித்த வாகனம் - மதவாச்சி மன்னார் பிரதான வீதி, இசைமாளத்தாழ்வு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியின் அருகில் உள்ள கம்பத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதன் போது, காயமடைந்த அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உள்ளடங்களாக மூவரும் உடனடியாக நோயாளர்காவு வண்டி மூலம் முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மடு திருவிழாவுக்கு சென்று திரும்பிவேளை விபத்து -அருட்தந்தை உள்ளடங்களாக மூவர் காயம் | Accident Today Mannaar Murunkanமூவரும் சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை முருங்கன் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.