மலையேறச் சென்ற பல்கலை மாணவர்களுக்கு நேர்ந்த கதி...
கண்டி - ஹந்தானை பிரதேசத்தில் உள்ள மலை ஒன்றுக்கு சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (01.07.2023) பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த குளவி கொட்டு சம்பவத்தில் 15 மாணவிகளும் 27 மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக அவர்களை மீட்டு, கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் ஹந்தானை பிரதேசத்தில் உள்ள மலை பகுதிக்கு சென்றுள்ளதாகவும் இதன்போதே குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.