மலையகத்தில் மண்சரிவு அபாயம் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...

மலையகத்தில் மண்சரிவு அபாயம் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...

நுவரெலியா - நோட்டன் பகுதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து விமலசுரேந்திர மின் நிலைய நீர்த்தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மலையகத்தில் மண்சரிவு அபாயம் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Heavy Rains In The Hills Open The Floodgates

இதேநேரம் நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நேற்றிரவு (01.07.2023)  முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் தேயிலை, கொழுந்து பறிக்கும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புள்ளாகியுள்ளது.

இந்நிலையில் அதிக மழை வீழ்ச்சி காரணமாக ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - நுவரெலியா உள்ளிட்ட பிரதான வீதிகளில் பல இடங்களில் மண் திட்டுக்கள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன் மண் சரிவு அபாயமும் விடுக்கப்பட்டுள்ளது.

எனவே  குறித்த மண்சரிவு அபாயமிக்க பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

மலையகத்தில் மண்சரிவு அபாயம் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Heavy Rains In The Hills Open The Floodgatesஅத்துடன் மலையக வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் என போக்குவரத்து துறை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், குறித்த நீர் வீழ்ச்சியினை பார்வையிடுவதற்கு  அருகில் செல்வதனை தவிர்த்துக்கொள்வதன் மூலம் ஆபத்துக்களை தவிர்த்துக்கொள்ளலாம் என பாதுகாப்பு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

Gallery Gallery Gallery Gallery Gallery