மக்கள் குழுவொன்றினால் அடித்து கொலை செய்யப்பட்ட திருடன்!

மக்கள் குழுவொன்றினால் அடித்து கொலை செய்யப்பட்ட திருடன்!

சூரியவெவ-வாவேகம பிரதேசத்தில் குழு ஒன்றின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தண்ணீர் மோட்டாரை திருட வந்த குறித்த நபரை அப்பகுதி மக்கள் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மக்கள் குழுவொன்றினால் அடித்து கொலை செய்யப்பட்ட திருடன்! | One Person Died After Being Attacked By A Group

உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

மேலும், உயிரிழந்த நபருடன் தொடர்புடைய திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர்களை இன்று (02) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.