
தமிழர் அரசியலில் ஒற்றுமை இல்லை – மன்னார் ஆயர் கவலை
தமிழ் அரசியல் நிலைமை இன்னும் குழப்பமானதாக உள்ளது. முன்பு ஓரளவுக்கேனும் இருந்த ஒற்றுமை நிலைமை இன்று இல்லாது போய் விட்டது என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களாகிய நமக்கு இன்று இருக்கக்கூடிய ஒரேயொரு ஆயுதம் நமது வாக்குச் சீட்டுத்தான். எனவே அதை நாம் முறையாகப் பயன்படுத்தி தகுதியான பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். இது விடயத்தில் நாம் அலட்சியமாக இருக்கக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மன்னார் மறைமாவட்ட ஆயர், மறைமாவட்ட இறைமக்களுக்கு எழுதும்; மேய்ப்புப்பணித் திருமடலில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.