அருகிவரும் உயிரினங்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – பிரதமர் மஹிந்த

அருகிவரும் உயிரினங்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – பிரதமர் மஹிந்த

சட்டவிரோதமான முறையில் மிருகங்கள் வேட்டையாடப்படுவது தொடர்பாக உடனடியாக விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அருகிவரும் உயிரினங்களை பாதுகாப்பது அரசாங்கதின் பொறுப்பு என்றும் ஆகவே அதற்கான நடவடிக்கைகளையும் செயற்படுத்துமாறும் அவர் ஆலோசனை வழங்கினார்.

நல்லத்தண்ணி பிரதேசத்தில் நேற்று முன்தினம் அரிய வகையிலான 7 வயது நிரம்பத்தக்க புலி மிருக பொறிக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளது. இவ்விடம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

சிறுத்தை, புலி கொல்லப்படும் சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெறுகிறது என்றும் அரிய வகை  கரும் புலி கொல்லப்பட்டமை நாட்டுக்கு உரித்தான சொத்து இழந்தமையாகவே கருத முடியும் என்றும் அவர் கூறினார்.

சட்ட விரோதமான முறையில் இடம்பெறும் மிருக வேட்டை தொடர்பாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் முறையான விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கினார்.