இறுதி முடிவுகளை 6 ஆம் திகதி பிற்பகல் அளவில் வெளியிட முடியும்

இறுதி முடிவுகளை 6 ஆம் திகதி பிற்பகல் அளவில் வெளியிட முடியும்

பொதுத் தேர்தலின் இறுதி முடிவுகளை ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி பிற்பகல் அளவில் வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

 

 ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


இம் முறை பொது தேர்தலுக்கான தாபல் மூல வாக்களிப்பிற்கு எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதி விசேட தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.