உடன் அமுலாகும் வகையில் 17 பொலிஸாருக்கு இடமாற்றம்

உடன் அமுலாகும் வகையில் 17 பொலிஸாருக்கு இடமாற்றம்

உடன் அமுலுக்கு வரும் வகையில் 17 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், 9 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், 4 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 2 பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்ட 17 பொலிஸாருக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம், ஹட்டன், யாழ்ப்பாணம், சிலாபம் ஆகிய பொலிஸ் பகுதிகள், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு, பிரதமர் பாதுகாப்புப் பிரிவு உள்ளிட்ட இடங்களுக்கு இவ்வாறு இடமாற்றம் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதிகளுக்கமைய குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சேவையின் தேவையின் அடிப்படையில் குறித்த இந்த நியமனங்கள் சேவையின் தேவைக்கு உடனடியாக அமல்படுத்தப்படுகின்றன.