தலைமன்னாரிலிருந்து தனுஸ்கோடிக்குள் ஊடுருவிய நபர்! தீவிர விசாரணையில் பொலிஸார்

தலைமன்னாரிலிருந்து தனுஸ்கோடிக்குள் ஊடுருவிய நபர்! தீவிர விசாரணையில் பொலிஸார்

தலைமன்னாரில் இருந்து படகு மூலம் தனுஸ்கோடி அரிச்சல் முனைக்கு சென்றதாக கூறப்படும் முஹமது உசேன் வயது-68 என்பவரை இன்று காலை கைது செய்த மெரைன் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி அரிச்சல் முனை கடல் பகுதியில் முஹமது உசேன் என்பவரை இன்று காலை தலைமன்னாரில் இருந்து சென்ற படகு இறக்கி விட்டு தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து தகவல் அறிந்த மெரைன் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று ஊடுருவியவரை மெரைன் பொலிஸ் ஆய்வாளர் கனகராஜ் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தார்.

இவரிடம் மெரைன்,கியூபிரிவு,உளவுத்துறை சுங்கத்துறை உள்ளிட்ட பாதுகாப்புத்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையைச் சேர்ந்த முஹமது உசேன் எனவும் தற்போது திருச்சியில் வசித்து வருவதாகவும் புடவை வியாபாரத்திற்காக இலங்கை சென்றதாகவும் தற்போது போக்குவரத்து முடக்கப்பட்டதால் 30 ஆயிரம் ரூபாய் செலுத்தி இலங்கை படகில் இந்தியா வந்ததாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.