அதிவேக நெடுஞ்சாலைக்குள் பிரவேசித்த விசேட விருந்தாளி

அதிவேக நெடுஞ்சாலைக்குள் பிரவேசித்த விசேட விருந்தாளி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மத்தள நுழைவு வாயிலுக்கு அருகில் உள்ள நெடுஞ்சாலைக்குள் காட்டு யானை ஒன்று வந்துள்ளது.

வீதியின் இரண்டு புறங்களிலும் யானைகள் வருவதை தடுக்க வேலிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும் இந்த யானை வீதிக்குள் வந்துள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், மாத்தறையில் இருந்து மத்தள மற்றும் ஹம்பாந்தோட்டை வரையான பகுதியை நிர்மாணிக்க பயன்படுத்திய நிலப்பகுதியானது யானைகள் அதிகமாக வாழ்ந்த பிரதேசமாகும்.

அபிவிருத்தி என்ற பெயரில் காட்டில் வாழும் விலங்குகளின் வழித்தடங்கல் அழிக்கப்பட்டுள்ளதாலேயே அவை மக்கள் வாழும் பகுதிகளுக்கு வர ஆரம்பித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.