ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் திடீரென பறந்து வந்த ட்ரோன் கெமராவால் குழப்பம்
கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் நேற்று இரவு மர்மமான முறையில் ட்ரோன் கெமரா ஒன்று வந்துள்ளது. இதனால் சற்று குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் இரவு 10.30 மணியளவில் குறித்த ட்ரோன் கெமரா விழுந்து உடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைரவகந்த தனியார் விடுதியில் தங்கியிருந்தவாறு, கண்டி நகரை படம் பிடிப்பதற்காக அனுப்பப்பட்ட ட்ரோன் கெமராவே இவ்வாறு உடைந்து விழுந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் யுக்ரேன் நாட்டைச் சேர்ந்த 36 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவரே இந்த செயலை செய்துள்ளார்.
இதையடுத்து, கண்டி சுற்றுலாப் பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.