தாத்தா மற்றும் மாமாவுடன் தோட்டத்துக்குச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு
புத்தளம் - சாலியாவௌ புளியங்குளம் பகுதியில் நீர் நிறைந்த பள்ளத்தில் விழுந்து மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (20) காலை இடம்பெற்றுள்ளதாக சாலியாவௌ பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் சாலியாவௌ, இஹல புளியங்குளம், மஹாகமவில் வசிக்கும் 17 வயதுடைய எச்.எம்.ஹர்ஷன ருக்ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நிலக்கடலை தோட்டத்தை யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காகச் சென்ற தனது தாத்தா மற்றும் மாமா ஆகியோருடன் குறித்த மாணவனும் சென்றுள்ளார்.
இதன்போது அங்கிருந்த நீர்க்குழி ஒன்றில் முகத்தைக் கழுவ முயன்றபோது அதில் வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த குறித்த மாணவன் பல ஆண்டுகளாக வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சாலியாவௌ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்டு வருகின்றனர்.