
மண்மேடு சரிந்து விழுந்ததில் இரு உயிர்கள் பலி..!
நுவரெலியா காவல்துறை பிரிவுக்குட்பட்ட பழைய கச்சேரி அமைந்துள்ள வெடமண் வீதி பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
தனியார் விடுதியொன்றுக்கு மதில் கட்டும் போது குறித்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக நுவரெலியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த அனர்த்தத்தில் உயிரிழந்த இருவரும் காலி - ஹில்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 மற்றும் 25 வயதுடையவர்கள் எனக் கூறப்படுகிறது.
மீட்கப்பட்டுள்ள இருவரது சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அதேசமயத்தில் நுவரெலியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.