பெண் ஊடகவியலாளர் தொடர்பில் விளக்கமளித்துள்ள இரகசிய காவல் துறை...!

பெண் ஊடகவியலாளர் தொடர்பில் விளக்கமளித்துள்ள இரகசிய காவல் துறை...!

சுவிஸ்லாந்து தூதுவராலயத்தின் உத்தியோகத்தர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தின் விசாரணைகளுக்கு பாதகத்தை ஏற்படுத்திய பெண் ஊடகவியலாளர் தொடர்பில் இரகசிய காவல்துறையினர் நீதிமன்றில் விளக்கமளித்துள்ளனர்.

சுவிஸ்லாந்து தூதுவராலயத்தின் உத்தியோகத்தர் கானியா பெனிஸ்ட்டர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு வெளிநாடொன்றில் வசிக்கும் பெண் ஊடகவியலாளர் தர்ஷா பெஸ்டின் அழுத்தத்தை கொடுத்திருந்தால் அல்லது இடையூறு ஏற்படுத்தியிருந்தால் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் குற்றவியல் விசாரணை பிரிவிற்கு உத்தரவிட்டிருந்தது.

அதற்கிணங்க கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த தருணம் முதல் தர்ஷா பெஸ்டின் இடையூறுகளை ஏற்படுத்தினால் என குற்றவியல் விசாரணை திணைக்களம் சார்பில் சமூகமளித்திருந்த காவல் துறை அத்தியட்சகர் மெரில் ரஞ்சனன் லமாஹேவா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க அனுமதியளிக்குமாறும் அவர் நீதிமன்றில் கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார்.

குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான் விசாரணைகளை ஆரம்பித்து சட்ட நடவடிக்கைளை மெற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.