மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இருவர் பலி..!

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இருவர் பலி..!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அமிர்தகழி பாடசாலை வீதியில் மின்சாரம் தாக்கி இரு இளைஞர்கள் பலியாகியுள்ளதுடன் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இடத்தில் புதிதாக வீடமைப்புக்கான கட்டடப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் கூரையின் மேல் தச்சு வேலையில் ஈடுபட்டிருந்த இருவருமே மின்சாரம் தாக்கி மரணமாகியுள்ளதுடன் மேசன் தொழிலாளியான மற்றையவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.

மரணமானவர்களின் சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மெற்கொண்டுள்ளனர்.